March 12, 2015

ஆன்லைன் சோதனை - வெப்ப இயக்கவியல் – II - TM

+ 2 அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் - 2006 முதல் செப்டம்பர் - 2014 வரை கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட எளிய வினா விடை சோதனை இது. இதில் பங்கெடுத்து உங்கள் திறனை சோதித்தறிக.

  1. டிரவுட்டன் விதிப்படி, ஆவியாதலின் என்ட்ரோபி மாற்றத்தின் மதிப்பு
  2. 21 கலோரி டிகிரி – 1 மோல் – 1
    12 கலோரி டிகிரி – 1 மோல்
    21 கிகலோரி டிகிரி மோல் – 1
    12 கிகலோரி டிகிரி மோல் – 1

  3. அனைத்து இயற்கை செயல்முறைகளும் தன்னிச்சையாக ___________ திசையை நோக்கி செயல்படுகின்றன
  4. என்ட்ரோபி குறைதல்
    என்தால்பி அதிகரித்தல்
    கட்டிலா ஆற்றல் அதிகரித்தல்
    கட்டிலா ஆற்றல் குறைதல்

  5. கிப்ஸ் கட்டிலா ஆற்றலில் ஏற்படும் மாற்றம்
  6. ΔG = ΔH + TΔS
    ΔG = ΔH – TΔS
    ΔG = ΔH x TΔS
    ΔG = TΔS – ΔH

  7. என்ட்ரோபி (S) மற்றும் செயல்முறையின் என்ட்ரோபி மாற்றம் (ΔS) ஆகியவை
  8. வழிச்சார்புகள்
    நிலைச்சார்புகள்
    மாறிலிகள்
    மதிப்புகளில்லை

  9. என்ட்ரோபி ஒரு _____________________ சார்பு
  10. நிலை
    வழி
    சரியான
    சரியற்ற

  11. 2Cl(g)  Cl2(g)வினையில் ΔH மற்றும் ΔS மதிப்புகளின் குறிகள் முறையே
  12. +, –
    +, +
    –, –
    –,+

  13. G மற்றும் ΔG - ன் மதிப்புகள் ______ சார்ந்தவையாகும்
  14. அமைப்பை மட்டும்
    சுற்றுப்புறத்தை மட்டும்
    அமைப்பு மற்றும் சுற்றுப்புறம்
    இவை அனைத்தும்

  15. H2O(l) → H2O(g), வினையில் என்ட்ரோபி
  16. மாற்றமில்லை
    குறைகிறது
    அதிகரிக்கிறது
    பூஜ்ஜியம்

  17. ஒரு வினையின் ΔG எதிர்குறியை பெற்றிருந்தால், அதில் ஏற்படும் மாற்றம்
  18. தன்னிச்சையானது
    தன்னிச்சையற்றது
    மீள்தன்மையுடையது
    சமநிலையானது

  19. ஒரு வெப்பமாறாச் செயல்முறையில் கீழ்க்கண்டவற்றில் எது உண்மையாகும்?
  20. q = w
    q = 0
    ΔE = q
    PΔV = 0

  21. SI அலகில் 1 eu =
  22. 41.84 EU
    4.184 EU
    418.4 EU
    4184 EU

  23. கீழ்க்கண்டவற்றுள் எந்த செயல்முறை எப்பொழுதும் சாத்தியமாகாது?
  24. ΔH > O, ΔS > O
    ΔH < O, ΔS > O
    ΔH > O, ΔS < O
    ΔH < O, ΔS < O

  25. தனிமங்களின் உருவாதலின் திட்ட கட்டிலா ஆற்றலின் மதிப்புகள்
  26. நேர்க்குறி
    எதிர்க்குறி
    பூஜ்ஜியம்
    இவை அனைத்தும்

  27. மாறாத வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் சுற்றுப்புறத்துடன் பரிமாற்றம் செய்யும் வெப்பத்தின் அளவு __________________
  28. ΔE
    ΔH
    ΔS
    ΔG

  29. மாறாத அழுத்தத்தில் சுற்றுப்புறத்துடன் பரிமாற்றம் செய்யும் வெப்பத்தின் அளவு ________________ எனப்படும்
  30. ΔE
    ΔH
    ΔS
    ΔG

  31. 0oC மற்றும் 1 atm - ல் ஒரு மோல் பனிக்கட்டியை 0oC மற்றும் 1 atm - ல் நீர்மமாக மாற்றும்போது என்ட்ரோபி மாற்றத்தைக் கணக்கிடு. பனிக்கட்டி உருகுதலின் என்தால்பி 6008 J mol – 1
  32. 22.007 Jmol–1 K–1
    22.007 Jmol K–1
    220.07 Jmol–1 K–1
    2.2007 Jmol–1 K–1

  33. நீர் (373K) → நீராவி (373K) என்ற செயல்முறையில் என்ட்ரோபி மாற்றத்தைக் கணக்கிடு. ΔHvap = 40850 J
  34. 10.952 J mol–1 K–1
    109.52 J mol–1 K–1
    100.952 J mol–1 K–1
    1095.2 J mol–1 K–1

  35. அமைப்பிலிருந்து பெறப்படும் மொத்த வேலையைக் குறிப்பது
  36. w – PΔV
    w + PΔV
    – w + PΔV
    – w – PΔV

  37. ஒரு வெப்ப இயந்திரம் 127°C மற்றும் 27°C வெப்பநிலைகளுக்கு இடையில் செயல்படுகிறதெனில் அதன் அதிகபட்ச சதவீத திறன்
  38. 20%
    50%
    100%
    25%

  39. மாறாத வெப்பநிலை T மற்றும் மாறாத அழுத்தம் P - யில் தன்னிச்சை மற்றும் மீளாச் செயல்முறைகளுக்கான வெப்ப இயக்கவியல் அடிப்படைக் காரணம்
  40. ΔG < 0
    ΔS < 0
    ΔG > 0
    ΔH > 0

  41. ஒரு நீர்மம் கொதிக்கும் போது அதன்
  42. என்ட்ரோபி உயருகிறது
    என்ட்ரோபி குறைகிறது
    ஆவியாதலின் வெப்பம் உயருகிறது
    கட்டிலா ஆற்றல் அதிகரிக்கிறது

  43. கீழ்க்கண்டவற்றுள் எது என்ட்ரோபியை அதிகரிக்காது?
  44. இரும்பு துருபிடித்தல்
    கரைசலில் உள்ள சுக்ரோஸை படிகமாக்குதல்
    கற்பூரத்தை பதங்கமாக்குதல்
    பனிக்கட்டியை நீராக மாற்றுதல்

  45. கீழ்க்கண்டவற்றுள் எது நிலைச்சார்பு?
  46. q
    Δq
    w
    ΔS

  47. 1 மோல் Sn (α, 13°C) ⇌ 1 மோல் Sn (β, 13°C) என்ற நிலைமை மாற்றத்தின் ΔH(நிலைமை மாற்றம்) = 2090 J.mol–1 எனில் என்ட்ரோபி மாற்றத்தின் மதிப்பு
  48. 22.007 J.mol –1 K–1
    7.307 J.mol–1 K–1
    0.314 J.mol–1 K–1
    109.52 J.mol–1 K–1

  49. ஒரு வெப்பமாறாச் செயல்முறையின்போது, மீள் செயல்முறையில் அண்டத்தின் என்ட்ரோபி மாற்றம்
  50. பூஜ்ஜியம்
    அதிகம்
    குறைவு
    மேற்கண்ட எதுவும் இல்லை

  51. என்ட்ரோபியின் SI அலகு
  52. Cal K–1 mol –1
    erg K–1 mol –1
    J deg–1 mol –2
    J K–1 mol –1

  53. வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதியின் சரியான கூற்று எது?
  54. ஒரு செயல்முறையின் என்ட்ரோபி குறையுமானால் அது தன்னிச்சையானது
    ஓர் இயந்திரத்தின் திறன் நூறு சதவீதமாக இருக்கலாம்
    எத்தகைய வேலையும் செய்யாமல் வெப்பத்தை குளிர்ந்த  பொருளிலிருந்து சூடான பொருளுக்கு மாற்ற இயலாது
    ஒரு இயந்திரத்தில் உறிஞ்சப்பட்ட ஆற்றல் முழுவதும் வேலையாக மாற்றலாம்

  55. T1 K, T2 K (T1 > T2வெப்பநிலைகளுக்கிடையே வேலை செய்யும் ஒரு வெப்ப இயந்திரத்தின் சதவீத திறனை கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்
  56. (T2 – T1 / T2) x 100
    (T1 – T2 / T1) x 100
    (T1 / T2) x 100
    (T2 / T1) x 100
பங்கெடுத்தமைக்கு நன்றி. உங்கள் முடிவு அறிய "Grade Me" கிளிக் செய்யவும்.
                                                                English Medium

No comments:

Post a Comment