March 11, 2015

ஆன்லைன் சோதனை - f – தொகுதி தனிமங்கள் - TM

+ 2 அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் - 2006 முதல் செப்டம்பர் - 2014 வரை கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட எளிய வினா விடை சோதனை இது. இதில் பங்கெடுத்து உங்கள் திறனை சோதித்தறிக.

  1. வாயு விளக்குப் பொருட்களில் பயன்படும் ஆக்சைடு ____________
  2. MnO2
    CeO2
    N2O5
    Fe2O3

  3. ____________ ஆக்சோ நேர் அயனிகளை உருவாக்குகிறது
  4. லாந்தனைடுகள்
    ஆக்டினைடுகள்
    உயரிய வாயுக்கள்
    கார உலோகங்கள்

  5. UF6 - ல் யுரேனியத்தின் ஆக்ஸிஜனேற்ற நிலை
  6. + 6
    + 4
    + 3
    0

  7. பாஜான்ஸ் விதியின்படி, Ln3+ அயனிகளின் பருமன் குறைவதால், Ln(OH)3   - இல் உள்ள Ln3+ மற்றும் OH அயனிக்கும் இடையே உள்ள
  8. சகப்பிணைப்புப் பண்பு அதிகமாகிறது
    சகப்பிணைப்புப் பண்பு குறைகிறது
    காரத்தன்மை அதிகமாகிறது
    அயனித்தன்மை அதிகமாகிறது

  9. லாந்தனைடுகளின் உலோகக் கலவை ____________ என அழைக்கப்படுகிறது
  10. மிஷ்உலோகம்
    உலோகப் போலி
    தட்டு உலோகம்
    ஆக்டினைடுகள்

  11. லாந்தனைடுகளின் அணு எண் அதிகரிக்க, அதிகரிக்க ஒடுக்கும் காரணியாக செயல்படும் திறன்
  12. அதிகரிக்கிறது
    குறைகிறது
    எந்தவித மாற்றமுமில்லை
    இவற்றில் எதுவுமில்லை

  13. சீரியா / CeO2 கீழ்க்கண்டவற்றுள் எதில் பயன்படுகிறது?
  14. பொம்மைகள்
    வழியறி குண்டுகள்
    வாயு விளக்குப் பொருட்கள்
    இவற்றில் எதுவுமில்லை

  15. லாந்தனைடு குறுக்கம் உருவாவது ____________
  16. 3d எலக்ட்ரானின் சீரான மறைப்பினால்
    3d எலக்ட்ரானின் சீரற்ற மறைப்பினால்
    4f எலக்ட்ரானின் சீரான மறைப்பினால்
    4f எலக்ட்ரானின் சீரற்ற மறைப்பினால்

  17. லாந்தனைடுகளின் மிக அதிகமான ஆக்ஸிஜனேற்ற நிலை
  18. + 3
    + 4
    + 2
    + 6

  19. லாந்தனைடுகளின் பொதுவான ஆக்ஸிஜனேற்ற நிலை
  20. + 2
    + 3
    + 4
    + 6

  21. (n– 2)f ஆர்பிட்டால்களில் கூடுதல் எலக்ட்ரான்கள் நுழையும் தனிமங்கள் ____________ - தொகுதி தனிமங்கள் என அழைக்கப்படுகிறது
  22. s
    p
    d
    f

  23. அணு மின் உலைகளில் எரிபொருளாகபயன்படுவது
  24. காப்பர்
    லெட்
    யுரேனியம்
    ரேடியம்

  25. தொலைதூர விண்வெளி ஆய்வுக் கலத்தில் எரிசக்தியாக பயன்படும் ஐசோடோப்பு
  26. U–235
    Pu–235
    Pu–238
    U–238

  27. லாந்தனைடு தனிமங்களில் கதிரியக்க தன்மையுள்ளது
  28. சீரியம்
    புரோமிதியம்
    கடோலினியம்
    லுட்டீசியம்

  29. ThO2 / தோரியா கீழ்க்கண்டவற்றுள் எதில் பயன்படுகிறது?
  30. பொம்மைகள்
    வழியறி குண்டுகள்
    வாயு விளக்குப் பொருட்கள்
    பருத்தி சாயமிட

  31. வாயு விளக்குப் பொருட்களில் பயன்படுவது எது?
  32. சீரியா
    தோரியா
    மிஷ்உலோகம்
    (அ) & (ஆ)

  33. லாந்தனைடுகள் ____________ லிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன
  34. லிமோனைட்
    மோனசைட்
    மாக்னடைட்
    காஸிட்டரைட்

  35. லாந்தனைடுகள் பிரித்தெடுக்கப்படும் முறை
  36. பின்ன வாலை வடித்தல்
    நீராவி வாலைவடித்தல்
    பின்ன படிகமாக்கல்
    பதங்கமாதல்

  37. லாந்தனைடுகளைக் கொண்டு செய்யப்படும் உலோக வெப்ப ஒடுக்குமுறைக்கு _______________ என்று பெயர்
  38. அலுமினோ வெப்ப ஒடுக்குமுறை
    லாந்தனிடோ வெப்ப ஒடுக்கு முறை
    ஒடுக்க முறை
    ஆக்ஸிஜனேற்ற முறை

  39. லாந்தனைடுகளின் எலக்ட்ரான் அமைப்பு
  40. [Xe]4f0 5d0 6s0
    [Xe] 4f1–7 5d1 6s1
    [Xe]4f1–14 5d1 6s2
    [Xe]4f1–14 5d1–10 6s2

  41. ஆக்டினைடுகளின் எலக்ட்ரான் அமைப்பு
  42. [Rn]5f0–14 6d0 7s0
    [Rn]5f0–14 6d0–2 7s0
    [Rn]5f0–14 6d0–2 7s1
    [Rn]5f0–14 6d0–2 7s2

  43. லாந்தனைடு குறுக்கம் கீழ்க்கண்டவற்றிற்கு பொறுப்பாகிறது
  44. Zn மற்றும் Y ஏறத்தாழ ஒரே ஆரத்தைக் கொண்டுள்ளது
    Zr மற்றும் Nb ஒரே ஆக்ஸிஜனேற்ற நிலையைக் கொண்டுள்ளது
    Zr மற்றும் Hf ஏறத்தாழ ஒரே ஆரத்தைக் கொண்டுள்ளது
    Zr மற்றும் Zn ஒரே ஆக்ஸிஜனேற்ற நிலையைக் கொண்டுள்ளது

  45. கதிரியக்க தன்மையுள்ள லாந்தனைடு
  46. Pu
    Ac
    Th
    Pm

  47. தொலைதூர விண்வெளி ஆய்வுக் கலத்தில் எரிசக்தியாக பயன்படுவது _______________
  48. Pu
    Pm
    Th
    U

  49. ஆக்டினைடுகளின் பொதுவான ஆக்ஸிஜனேற்ற நிலை
  50. + 2
    + 1
    + 3
    + 4

  51. பின்வரும் லாந்தனைடுகளில், எதில் பகுதியளவே நிரப்பப்பட்ட 4f துணைக்கூடுகள் இல்லை. ஆனால் 5d - துணைக்கூட்டில் எலக்ட்ரான்கள் உள்ளன?
  52. Ce
    Lu
    Pm
    Nd

  53. UO2Cl2 - ல் யுரேனியத்தின் ஆக்ஸிஜனேற்ற நிலை
  54. + 2
    + 4
    + 5
    + 6

  55. லாந்தனைடுகளின் முக்கியத் தாது
  56. பிட்ச் பிளன்ட்
    மோனோசைட்
    ஜிப்சம்
    குரோமைட்

  57. ஆக்டினைடு குறுக்கம் உருவாவது ____________
  58. 4d எலக்ட்ரானின் சீரான மறைப்பினால்
    4d எலக்ட்ரானின் சீரற்ற மறைப்பினால்
    5f எலக்ட்ரானின் சீரான மறைப்பினால்
    5f எலக்ட்ரானின் சீரற்ற மறைப்பினால்

  59. ____________ சிகரெட் பற்ற வைப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது
  60. மிஷ்உலோகம்
    CeO2
    மெக்னீசிய கலவை
    பைரோபோரி›க் உலோகக் கலவை
பங்கெடுத்தமைக்கு நன்றி. உங்கள் முடிவு அறிய "Grade Me" கிளிக் செய்யவும்.
                                                               English Medium

No comments:

Post a Comment