March 01, 2015

ஆன்லைன் சோதனை - கூடுதல் வினாக்கள் 2014 - TM


+ 2 அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு மார்ச், ஜூன் மற்றும் செப்டம்பர் - 2014 இல் கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட எளிய வினா விடை சோதனை இது. இதில் பங்கெடுத்து உங்கள் திறனை சோதித்தறிக.

  1. ஆக்டினைடுகளின் பொதுவான ஆக்ஸிஜனேற்ற நிலை
  2. +2
    +1
    +3
    +4

  3. பின்வரும் லாந்தனைடுகளில், எதில் பகுதியளவே நிரப்பப்பட்ட 4f துணைக்கூடுகள் இல்லை. ஆனால் 5d-துணைக்கூட்டில் எலக்ட்ரான்கள் உள்ளன?
  4. ஸ்காண்டியம்
    டைட்டானியம்
    ஜிங்க்
    லாந்தனம்

  5. குளோரோபில் _________ சேர்மம் (அணைவுச் சேர்மம்)
  6. மெக்னீசியம் - போர்பைரின்
    இரும்பு – போர்பைரின்
    காப்பர் - போர்பைரின்
    நிக்கல் - போர்பைரின்

  7. 90Th232 82Pb208  என்ற உட்கருவினையில் வெளியிடப்படும் α மற்றும் β துகள்களின் எண்ணிக்கை
  8. 1α, 4β
    2α, 2β
    6α, 4β
    8α, 4β

  9. ஒரு படிகத்தில் உள்ள மீண்டும் மீண்டும் அமையக்கூடிய மிகச்சிறிய அலகு
  10. அணிக்கோவை புள்ளி
    படிக அணிக்கோவை
    அலகுக்கூடு
    ஐசோமார்பிசம்

  11. தொடுமுறையில் ஈரப்பதம் இருந்தால்
  12. வினையூக்கியின் செயல்திறனை அதிகரிக்கிறது
    வினையூக்கியின் செயல்திறனை குறைக்கிறது
    வினைவிளைபொருளை உயர்த்துகிறது
    வினையூக்கியில் துளைகளை ஏற்படுத்துகிறது

  13. CH3MgI - ஐ தயாரிக்க ஆல்கஹாலை கரைப்பானாகப் பயன்படுத்த முடியாது ஏன்?
  14. CH3MgI ஆல்கஹாலுடன் வினைபுரிந்து மீதேனைத் தருகிறது
    இவை இரண்டின் கலவை வெடிக்கும் தன்மையது
    CH3MgI ஆல்கஹாலுடன் வினைபுரிந்து C2H5MgI ஐத் தருகிறது
    ஆல்கஹாலில் CH3MgI கரைவதில்லை

  15. டாலன்ஸ் கரணி என்பது
  16. அம்மோனியா கலந்த குப்ரஸ் குளோரைடு
    அம்மோனியா கலந்த குப்ரஸ் ஆக்சைடு
    அம்மோனியா கலந்த சில்வர் நைட்ரேட்
    அம்மோனியா கலந்த சில்வர் குளோரைடு

  17. கார்பாக்சிலிக் அமில வழிப்பொருள்களின் செயல்திறன் கீழ்க்கண்டவாறு உள்ளது
  18. அமில குளோரைடு > எஸ்டர் > அமைடு > அமில நீரிலி
    அமில குளோரைடு > அமில நீரிலி > எஸ்டர் > அமைடு
    அமில குளோரைடு > எஸ்டர் > அமில நீரிலி > அமைடு
    அமில நீரிலி > எஸ்டர் > அமைடு > அமில குளோரைடு

  19. மெத்தில் ஐசோ சயனைடை LiAlH4 கொண்டு ஒடுக்கம் செய்வதால் கிடைப்பது
  20. மெத்தில் அமீன்
    எத்தில் அமீன்
    டை மெத்தில் அமீன்
    ட்ரை மெத்தில் அமீன்

  21. _________ பிராணிகள் மற்றும் தாவரங்களின் மேல் பரப்பை பாதுகாக்கிறது
  22. கார்போஹைடிரேட்டுகள்
    விட்டமின்கள்
    உட்கரு அமிலங்கள்
    மெழுகுகள்

  23. ஒரு மூலக்கூறின் Nb = 8 மற்றும் Na = 2 எனில் அதன் பிணைப்புத்தரம்
  24. 3
    4
    2.5
    2

  25. UO2Cl2  - ல் யுரேனியத்தின் ஆக்ஸிஜனேற்ற நிலை
  26. + 2
    + 4
    + 5
    + 6

  27. [Co(NO2)(NH3)5]SO4 மற்றும் [Co(SO4)(NH3)5]NO2 சேர்மங்களில் உள்ள மாற்றியம் என்ன?
  28. நீரேற்று மாற்றியம்
    அணைவு மாற்றியம்
    பிணைப்பு மாற்றியம்
    அயனியாதல் மாற்றியம்

  29. 92U238 → 82Pb206 என்ற உட்கருவினையில் வெளியிடப்படும் α மற்றும் β துகள்களின் எண்ணிக்கை
  30. 7α, 5β
    6α, 4β
    4α, 3β
    8α, 6β

  31. வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதியின் சரியான கூற்று எது?
  32. ஒரு செயல்முறையின் என்ட்ரோபி குறையுமானால் அது தன்னிச்சையானது
    ஓர் இயந்திரத்தின் திறன் நூறு சதவீதமாக இருக்கலாம்
    எத்தகைய வேலையும் செய்யாமல் வெப்பத்தை குளிர்ந்த பொருளிலிருந்து சூடான பொருளுக்கு மாற்ற இயலாது
    ஒரு இயந்திரத்தில் உறிஞ்சப்பட்ட ஆற்றல் முழுவதும் வேலையாக மாற்றலாம்

  33. தொடுமுறையில் பெறப்படும் அதிகபட்ச SO3 ன் அளவு
  34. 97%
    37%
    50%
    47%

  35. அர்ஹீனியஸ் சமன்பாடு
  36. k = Ae– 1/RT
    k = Ae– RT / Ea
    k = Ae– Ea/RT
    k = AeEa/RT

  37. KClO3 சிதைவுறும் வினையில் பயன்படுத்தப்படும் வினைவேக மாற்றி
  38. MnO2
    Cl2
    V2O5
    Pt

  39. ஒரு வலிமை மிகுந்த அமிலத்தை வலிமை மிகுந்த காரத்துடன் நடுநிலையாக்கும்போது ஏற்படும் என்தால்பி மதிப்பு
  40. – 87.32 kJ equiv– 1
    – 57.32 kJ equiv– 1
    – 72.57 kJ equiv– 1
    – 77.23 kJ equiv– 1

  41. அயோடஃபார்ம் சோதனைக்கு உட்படும் சேர்மம்
  42. 1 - பென்டனால்
    2 - பென்டனோன்
    3 - பென்டனோன்
    பென்டேனேல்

  43. அனிசோல் புரோமினேற்றம் அடைந்து கிடைப்பது
  44. o - புரோமோ அனிசோல்
    m - புரோமோ அனிசோல்
    p - புரோமோ அனிசோல்
    அ) மற்றும் இ)

  45. ஃபார்மால்டிஹைடை பலபடியாக்கினால் கிடைப்பது
  46. பாரால்டிஹைடு
    பாராஃபார்மால்டிஹைடு
    ஃபார்மலின்
    ஃபார்மிக் அமிலம்

  47. C6H5–NO2 → C6H5 –NH2 இம்மாற்றத்திற்கு பயன்படாத கரணி எது?
  48. Sn / HCl
    LiAIH4
    H2 / Ni
    Zn / NaOH

  49. p-ஆர்பிட்டாலின் வடிவம்
  50. கோளம்
    குளோவர் இலை
    டம்பல்
    உருளை

  51. வினைவேக மாற்றியின் செயல்திறனை அதிகரிக்க பயன்படுவது
  52. ஊக்க வினைவேக மாற்றி
    தளர்வு வினைவேக மாற்றி
    உயர்த்திகள்
    வினைவேக மாற்றியின் நச்சு

  53. 92X232 89Y220 என்ற வினையில் வெளியிடப்படும் α மற்றும் β துகள்களின் எண்ணிக்கை
  54. 3α, 3β
    5α, 3β
    3α, 5β
    5α, 5β

  55. எத்திலீன் கிளைக்காலிலிருந்து டெரிலீன் உண்டாக்க உதவுவது
  56. அடிப்பிக் அமிலம்
    தாலிக் நீரிலி
    டெரிதாலிக் அமிலம்
    ஆக்சாலிக் அமிலம்

  57. T1 K, T2 K (T1 > T2) வெப்பநிலைகளுக்கிடையே வேலை செய்யும் ஒரு வெப்ப இயந்திரத்தின் சதவீத திறனை கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்
  58. (T2 – T1 / T2) x 100
    (T1 – T2 / T1) x 100
    (T1 / T2) x 100
    (T2 / T1) x 100

  59. முதல் இடைநிலைத் தனிம வரிசையை சேர்ந்த ஓர் உலோக அயனியின் எண்முகி அணைவுச் சேர்மத்தின் காந்தத் திருப்பபுத்திறன் 4.9 BM அவ்வுலோகத்தின் மற்றொரு எண்முகி சேர்மம் டையாகாந்தத் தன்மைகொண்டது. அவ்வுலோகம்
  60. Fe2+
    Co2+
    Mn2+
    Ni2+

  61. உபரி சோடியம் ஹைட்ராக்ஸைடு ஜிங்குடன் வினைபுரிந்து உண்டாக்குவது
  62. Zn - H2
    Na2ZnO2
    ZnO
    Zn(OH)2

  63. கொப்புளக் காப்பரின் தூய்மை
  64. 100%
    98%
    90%
    12%

  65. Δng நேர்க்குறியீடு என்றிருக்கும்போது
  66. Kp = Kc
    Kc < Kp
    Kc > Kp
    Kc = 0

  67. கீழ்க்கண்ட எந்த துகள் ஒரே இயக்க ஆற்றலையும் அதிகப்பட்ச டிபிராக்ளே அலைநீளத்தையும் பெற்றுள்ளது
  68. α - துகள்
    புரோட்டான்
    β - துகள்
    நியூட்ரான்

  69. லாந்தனைடுகளின் முக்கியத் தாது
  70. பிட்ச் பிளன்ட்
    மோனோசைட்
    ஜிப்சம்
    குரோமைட்

  71. HCl மற்றும் சோடியம் ஹைட்ராக்சைடுடன் தரம் பார்த்தலில் பயன்படும் நிறங்காட்டி
  72. பொட்டாசியம் பெர்மாங்கனேட்
    பினால்ப்தலீன்
    லிட்மஸ்
    மெத்தில்ஆரஞ்சு

  73. ஒரு வரைபடத்தை கண்ணாடியில் எதன் உதவியுடன் வரைய முடியும்?
  74. HI
    HF
    HBr
    HCl

  75. மக்னீசியா பால்மம் ___________ பயன்படுகிறது
  76. பூச்சிக் கொல்லியாக
    உரங்களாக
    வயிற்று கோளாறுகளுக்கு
    டானிக்கில்

  77. ஓரிணைய அலிஃபாட்டிக் அமீன், குளோரோஃபார்ம் ஆல்கஹால் கலந்த KOH ஆகியவைகளுக்கிடையே உள்ள வினையின் பெயர்
  78. கேப்ரியல் வினை
    கடுகு எண்ணெய் வினை
    கார்பைல் அமீன் வினை
    ஹாஃப்மன் வினை

  79. பின்வரும் லாந்தனைடுகளில், எதில் பகுதியளவே நிரப்பப்பட்ட 4f துணைக்கூடுகள் இல்லை. ஆனால் 5d-துணைக்கூட்டில் எலக்ட்ரான்கள் உள்ளன?
  80. Ce
    Lu
    Pm
    Nd
பங்கெடுத்தமைக்கு நன்றி. உங்கள் முடிவு அறிய "Grade Me" கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment