April 23, 2012

அணுக்கரு வேதியியல் (Nuclear Chemistry) ஒரு மதிப்பெண்

1.  92U235 உட்கரு ஒரு நியூட்ரானை உறிஞ்சி 54Xe139, 38Sr94  மற்றும் X விளைபொருளைத் தருகிறது. இதில் X என்பது
அ) 3 நியூட்ரான்கள்     ஆ) 2  நியூட்ரான்கள்    இ) α – துகள்          ஈ) β – துகள்
2. ஒரு கிராம் கதிரியக்க ஐசோடோப்பில் 24 மணி நேரத்திற்குப்பின் 0.125கி எஞ்சி  நின்றது. அரைவாழ் காலத்தைக் கணக்கிடு. 
அ) 24 மணிகள்            ஆ)  12 மணிகள்             இ) 8 மணிகள்        ஈ) 16 மணிகள்
3. 5B8 4Be8  என்ற வினையில் வெளிவிடப்படும் துகள்
அ) α – துகள்                                                         ஆ) β – துகள்
இ) எலக்ட்ரான் கவர்தல்                                      ஈ) பாசிட்ரான் துகள்
4. ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அரைவாழ் காலம் 1500 வருடங்கள். சிதைவு மாறிலியின் மதிப்பை நொடி அளவில் கணக்கிடுக. 
அ) 0.1465 × 10-10 நொடி–1                               ஆ) 0.2465 × 10-10  நொடி–1 
இ) 0.1465 × 10-8 நொடி–1                                 ஈ) 0.3645 × 10-10 நொடி–1
5. ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அரைவாழ் காலம் 100  நொடிகள்–1. அத்தனிமத்தின் சராசரி வாழ்காலம் 
அ) 100 நொடிகள்        ஆ) 200 நொடிகள்         இ) 50 நொடிகள்   ஈ) 144 நொடிகள்
6. உட்கரு வினைகளில் இருபுறமும் _____ சமன் செய்யப்படும்.
அ) நிறை                                                                ஆ) அணுக்களின் எண்ணிக்கை
இ) நிறை எண்                                                        ஈ) அணு எண் மற்றும் நிறை எண் 
7.  β – துகள் இழப்பு _________ என்பதற்கு சமம்.
அ) ஒரு புரோட்டான் அதிகரிப்பு                        ஆ) ஒரு நியூட்ரான் இழப்பு
இ) அ) மற்றும் ஆ)                                                ஈ) இவற்றுள் ஏதுமில்லை /
அ) ஒரு புரோட்டான் அதிகரிப்பு                         ஆ) ஒரு நியூட்ரான் இழப்பு
இ) ஒரு புரோட்டான் இழப்பு / ஒரு நியூட்ரான் அதிகரிப்பு மட்டும் / இவற்றுள் ஏதுமில்லை
ஈ) அ) மற்றும் ஆ)
8. கதிர்வீச்சுக்கான காரணம்
அ) நிலைத்த எலக்ட்ரான் அமைப்பு            ஆ) நிலைத்த உட்கரு
இ) நிலைப்புத்தன்மையற்ற உட்கரு            ஈ) நிலைப்புத்தன்மையற்ற எலக்ட்ரான் அமைப்பு
9. ஊடுருவும் ஆற்றல் அதிகம் கொண்ட கதிர்வீச்சு
அ) α கதிர்                                           ஆ) β கதிர்
இ) γ கதிர்                                           ஈ) அனைத்தும் சம ஊடுருவும் தன்மை வாய்ந்தவை
10. 5B8 4Be8  என்ற வினை நடைபெற காரணம்
அ) α – சிதைவு                                                      ஆ) β – சிதைவு
இ) எலக்ட்ரான் கவர்தல்                                      ஈ) பாசிட்ரான் சிதைவு
11. 7N15 உட்கருவை புரோட்டானால் தாக்கினால்  6C12 மற்றும் _______  ஐத்  தருகிறது 
அ) α – துகள்             ஆ) β – துகள்                        இ) நியூட்ரான்               ஈ) புரோட்டான்
12. நியூட்ரான் உறிஞ்சியாக அணு உலைகளில் பயன்படும் பொருள்
அ) நீர்                     ஆ) டியூட்டீரியம்               இ) யுரேனிய சேர்மம்     ஈ) கேட்மியம்
13. 13Al27 உட்கருவை தாக்கி 15P30  உட்கரு மற்றும் நியூட்ரானைத் தரும் தாக்கும் துகள்

அ) α – துகள்            ஆ) டியூட்ரான் / β – துகள்    இ) புரோட்டான்           ஈ)  நியூட்ரான்
மூன்று மதிப்பெண் ஐந்து மதிப்பெண்

No comments:

Post a Comment