April 25, 2012

வேதிச்சமநிலை - II (Chemical Equilibrium – II) ஒரு மதிப்பெண்

1. 2H2O(g)+2Cl2(g) ⇌ 4HCl(g)+5O2(g), வினைக்கு Kp மற்றும் Kc மதிப்புக்கு
இடையோயான தொடர்பு
அ) Kp = Kc               ஆ) Kp > Kc                     இ) Kp< Kc                ஈ) Kp = Kc = 0.
2. 600 K வெப்பநிலையில் நிகழும் பின்வரும் ஒருபடித்தான வாயு சமநிலை வினையில் Kc- யின் அலகு 4NH3(g) + 5O2(g)⇌ 4NO(g) + 6H2O(g) 
அ) (mol dm–3)–1     ஆ) (mol dm3)               இ) (mol dm–3)4       ஈ) (mol dm–3)–2
3. ஒரு வெப்பம்கொள் சமநிலை வினையில் T1 மற்றும் T2 வெப்பநிலைகளில்  சமநிலை மாறிலிகள் K1 மற்றும் Kஎனில் வெப்பநிலை T2 ஆனது T1 வை விட  அதிகமாக  இருக்கும்போது (T2 >T1)
அ) K1 < K2             ஆ) K1 > K2                    இ) K1 = K2                ஈ) ஏதும் இல்லை /
அ) K1 ஆனது K2 ஐ விட குறைவு                ஆ) K1 ஆனது Kஐ விட அதிகம்
இ) K1ஆனது K2 க்கு சமம்                            ஈ) ஏதும் இல்லை
4. முன்னோக்கு வினை நிகழ்வது _____ ஆக இருக்கும்போது சாத்தியமாகிறது
அ) Q < kc                ஆ) Q > kc                     இ) Q = kc                     ஈ) kc = 1/Q
5. H2(g) + I2(g) ⇌ 2 HI(g) என்ற சமநிலை வினைக்கு சமநிலை மாறிலி Kc -யின் மதிப்பு 16. Kp- யின் மதிப்பு
அ) 1 / 16                   ஆ) 4                            இ) 64                           ஈ) 16.
6. ஒரு வினைவிளைபொருளின் உருவாதல் சமநிலை மாறிலி 25. அதே வினைவிளை பொருளின் பிரிகை சமநிலை மாறிலி 
அ) 25                        ஆ) 1 / 25                     இ) 5                            ஈ) 625.
7. பின்வரும் வினைகளுக்கு சமநிலை மாறிலிகள் 2A ⇌ B-க்கு K1-ம் B ⇌ 2A-க்கு K2-ம் ஆகும் எனில் 
அ) K1 = 2K2           ஆ) K1 = 1/K2             இ) K2 = (K1)2          ஈ) K1 = 1/K22
8. 2O3 ⇌ 3O2 வினைக்கு Kc -யின் மதிப்பு 
அ) [O3]3 / [O2]2      ஆ) [O2]2 / [O3]3        இ) [O2]3 / [O3]2       ஈ) [O3] / [O2]
9. N2 + 3H2 ⇌ 2NH3 என்ற சமநிலையில் அதிக அளவு அம்மோனியா கிடைப்பது அ) குறைந்த அழுத்தம் மற்றும் அதிக வெப்பநிலை 
ஆ) குறைந்த அழுத்தம் மற்றும் குறைந்த வெப்பநிலை
இ) அதிக அழுத்தம் மற்றும் அதிக வெப்பநிலை
ஈ) அதிக அழுத்தம் மற்றும் குறைந்த வெப்பநிலை
10. ஹேபர் முறையில் அதிக அளவு அம்மோனியா கிடைப்பது
அ) அதிக அழுத்தத்தில்                               ஆ) குறைந்த அழுத்தத்தில் இ) அதிக வெப்பநிலையில்                        ஈ) வினையூக்கி இல்லாதபோது
11. 2HI(g) ⇌ H2(g) + I2(g), என்ற சமநிலை வினையில் Kp ஆனது
அ) Kc  ஐ விட அதிகம்                             ஆ) Kc  ஐ விட குறைவு
இ) Kc க்கு சமம்                                          ஈ) பூஜ்ஜியம் / ௦0
12. Nமற்றும் H2 ஆகியவற்றிலிருந்து NH3 தயாரித்தல் வினையில் Kc -ன் அலகு
அ) lit2 mol–2            ஆ) atm–2               இ) lit atm–1                    ஈ) atm-l
13. வேதிச்சமநிலையின் தன்மை 
அ) இயங்குச் சமநிலை                           ஆ) நிலையானது
இ) இரண்டும்                                           ஈ) ஒன்றுமில்லை
14. 2A ⇌ B என்ற வினையின் 900K-ல் சமநிலை மாறிலியின் மதிப்பு 25 mol-1 dm3 எனில் B ⇌ 2A வினையின் சமநிலை மாறிலியின் மதிப்பை அதே வெப்பநிலையில் dm-3 mol-ல் கணக்கிடு.
அ) 25                       ஆ) 625                      இ) 0.04                          ஈ) 0.4.
15. வினைபடு பொருட்களின் ஒரு பகுதி பின்னம் சிதைவடைவது _________ எனப்படுகிறது
அ) பிரிகைசமநிலை                                ஆ) சேர்க்கை வீதம்
இ) பிரிகை வீதம்                                      ஈ) பிரிகை மாறிலி
16. ஹேபர் முறையில் அதிக பட்சமாக அம்மோனியா உருவாதல் 
அ) 78%                   ஆ) 97%                   இ) 37%                            ஈ) 89%
17. தொடுமுறையில் SO3 தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சமன்  செய்யப்பட்ட வெப்பநிலை எல்லை  
அ) 400°C to 450°C                                ஆ) 1800°C to 2700°C
இ) 500°C to 550°C                                 ஈ) 350°C to 450°C
18. முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளின் வினைவேக மாறிலி முறையே 8 × 10-5 மற்றும் 2 × 10- 4. Kc -யின் மதிப்பு 
அ) 0.04                    ஆ) 0.02                   இ) 0.2                             ஈ) 0.4
19. 2H2O(g) + 2Cl2(g) ⇌ 4HCl(g) + O2(g) என்ற சமநிலைவினைக்கு Kp மற்றும் Kc -க்கு  இடையேயான தொடர்பு 
அ) Kp = Kc            ஆ) Kp = Kc(RT)2     இ) Kp = Kc(RT)1       ஈ) Kp = Kc(RT)–2.
 20. காற்று வெளியேற்றப்பட்ட 1.0 dm3 கொள்ளளவுள்ள கலத்தில் இரு மோல்கள் NH3 வாயு செலுத்தப்பட்டது. உயர் வெப்பநிலையில் NH3 சிதைந்து சமநிலையில் ஒரு மோல் NH3 மட்டும் எஞ்சி நின்றது. இச்சிதைவு வினையின் Kc மதிப்பு 
அ) 27/16 (mole dm–3)2                         ஆ) 27/8 (mole dm–3)2 
இ) 27/4 (mole dm–3)2                            ஈ) இவற்றுள் ஏதுமில்லை
21. ஒருப்படித்தான சமநிலை வினைக்கு Δng  நேர்க்குறியாக இருக்கும்போது
அ) Kp = Kc               ஆ) Kp > Kc           இ) Kc > Kp                    ஈ) Kp = 2Kc
22. வெப்பநிலையை உயர்த்துவது கீழ்க்கண்ட எந்த வாயு நிலைமையிலுள்ள சமநிலை வினை நிகழ்வதற்கு சாதகமாகிறது?
அ) N2O4 ⇌ 2NO2; ΔH = + 59 kJ mol–1 ஆ) N2+3H2 ⇌ 2NH3: ΔH = - 22 kcal mol–1 
இ) 2SO2+O2 ⇌ 2SO3 ΔH = - 47 k cal mol–1          ஈ) (ஆ) மற்றும் (இ). 
23. கீழ்க்கண்டவற்றுள் எதற்கு Δng எதிர்க்குறி மதிப்பாக இருக்கும்?

அ) H2(g)+ I2(g) ⇌ 2HI(g)                          ஆ) PCl5(g) ⇌ PCl3(g) + Cl2(g) 

இ) 3H2(g) + N2(g) ⇌ 2NH3(g)                  ஈ) 2H2O(g) + 2Cl2(g) ⇌ 4HCl(g) + O2(g).
மூன்று மதிப்பெண் ஐந்து மதிப்பெண்

No comments:

Post a Comment