April 22, 2012

அணு அமைப்பு – II (Atomic Structure – II) ஒரு மதிப்பெண்


1. கீழ்க்கண்டவற்றில் எந்த துகள் அதிகப்பட்ச டி- பிராக்ளே அலைநீளத்தை பெற்றுள்ளது?
அ) புரோட்டான்             ஆ) நியூட்ரான்          இ) α - துகள்              ஈ) β - துகள்
2. டி- பிராக்ளே சமன்பாடு

அ) λ = mv / h                  ஆ) λ = hmv               இ) λ = hv / m              ஈ) λ = h / mv
3. எலக்ட்ரானின் ஈரியல்புத் தன்மையை விளக்கியவர்
அ) போர்                          ஆ)  ஹைசன்பர்க்      இ) டி பிராக்ளே      ஈ) பாலி
 4. En = − 313.6/n2, En = – 34.84 எனில் n–ன் மதிப்பு  
அ) 4                                  ஆ) 3                          இ) 2                             ஈ) 1
 5. மூலக்கூறு ஆர்பிட்டல்களில் ஆற்றல் மட்டங்கள் ________ மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன
அ) நிறநிரல் சோதனைகள்                              ஆ) X–கதிர் விளிம்பு வளைவு சோதனை இ) படிகங்களின்  உள்கட்டமைப்புப் பற்றி படித்தல் / படிகவியல்
ஈ) இவற்றுள் ஏதுமில்லை.
6. இரண்டாவது போர் சுற்றுவட்டப்பாதையில் ஹைட்ரஜன் அணுவில் உள்ள எலக்ட்ரான் ஆற்றல் – E எனில் முதல் சுற்றுவட்டப்பாதையில் எலக்ட்ரானின் ஆற்றல் என்ன?
அ) 2E                            ஆ) – 4E                    இ) – 2E                         ஈ) 4E
7. ஒரு மூலக்கூறில் பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலில் எட்டு எலக்ட்ரான்களும் எதிர்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலில் நான்கு  எலக்ட்ரான்களும் உள்ளன. அதன் பிணைப்புத்தரம்  
அ) 3                               ஆ) 1                         இ) 2.5                          ஈ) 2
8. மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட ஹைட்ரஜன் பிணைப்பு ____ ல் காணப்படுகிறது.  
அ) HF                     ஆ) H2O                இ) எத்தனால்            ஈ) இவை அனைத்தும் /
அ)  o-நைட்ரோபினால்                                ஆ) சாலிசிலிக் அமிலம் 
இ) o-ஹைட்ராசி பென்சால்டிஹைடு          ஈ) ஹைட்ரஜன் புளுரைடு
9. மூலக்கூறில் நிகழும் H பிணைபிற்கான சான்று
அ) o-நைட்ரோபினால்  ஆ) m-நைட்ரோபினால்  இ) p-நைட்ரோபினால் 
ஈ) இவற்றுள் ஏதுமில்லை / p-அமைனோபினால் / p-ஹைட்ராசி பென்சால்டிஹைடு
10. குறைந்த ஆற்றல் கொண்ட மூலக்கூறு ஆர்பிட்டால் 
அ) σ1s                        ஆ)σ*1s                        இ) π2py                        ஈ) π*2py
11. 2s ஆர்பிட்டாலில் உள்ள நோட்களின் எண்ணிக்கை 
அ) 1                            ஆ) 2                              இ) 3                               ஈ) 4
12. நைட்ரஜன் மூலக்கூறில் பிணைப்புத்தரம்  

அ) 2.5                       ஆ) 3                                இ) 2                              ஈ) 4
13. ஹைட்ரஜன்மூலக்கூறில் பிணைப்புத்தரம்  
அ) 2.5                      ஆ) 1                                 இ) 3                               ஈ) 2
14. எலக்ட்ரானின் சுற்றுவட்டப்பாதையானது ______ ன் முழு எண்களின் மடங்குகளின் பெருக்குத்தொகைக்கு சமம்
அ) அதிர்வெண்     ஆ) உந்தம்                         இ) நிறை                       ஈ) அலைநீளம்
15. IF7 மூலக்கூறில் உள்ள இனக்கலப்பு
அ) sp3d                ஆ) sp3d2                            இ) sp3                           ஈ)sp3d3  
16. CO32- அயனியில் உள்ள இனக்கலப்பு
அ)   sp2                 ஆ) sp3                                இ) sp                             ஈ) sp3d
17. SF6 மூலக்கூறில்  உள்ள இனக்கலப்பு
அ) sp3                  ஆ) sp3d                              இ) sp3d2                       ஈ) sp3d3
18. SO42- அயனியில் உள்ள இனக்கலப்பு
அ)sp3                   ஆ) sp3d2                           இ) sp3d                         ஈ) sp3d3
19. XeF6 மூலக்கூறில் உள்ள இனக்கலப்பு
 அ) sp3d3             ஆ) sp3d2                          இ) sp3d                           ஈ) sp3.
20. NH4+ அயனியில் உள்ள இனக்கலப்பு
அ) sp                    ஆ) sp2                               இ) sp3                               ஈ) sp3d.
21. ஒரு துகளின்  டி- பிராக்ளே அலைநீளம் 1Å எனில் அதன்  உந்தம் (h = 6.626x1034 kgm2s–1)
அ)  6.63 x 10-23 kgms–1                              ஆ) 6.63 x 10-24 kgms–1 
இ) 6.63 x 10-34 kgms–1                                ஈ) 6.63 x 1034 kgms
22. கீழ்க்கண்ட எந்த துகள் ஒரே இயக்க ஆற்றலை பெற்றுள்ளது?
அ) α - துகள்           ஆ) புரோட்டான்           இ) β - துகள்                           ஈ) நியூட்ரான்
23. கீழ்க்கண்ட எந்த சோதனை மூலம் எலக்ட்ரானின் அலைத் தன்மை நிரூபணமாகிறது? 
அ)  G.P. தாம்சனின் தங்கதகடு சோதனை ஆ) கரும்பொருள் கதிர்வீச்சு
இ) ஒளிமின்விளைவு                                      ஈ) முலிக்கன் எண்ணெய் துளி ஆய்வு
24. நீரானது திரவ நிலையில் உள்ளது இதற்கு காரணம்
அ) அதிக கொதிநிலை                                 ஆ) குறைந்த கொதிநிலை
இ) உறைநிலை                                              ஈ) ஹைட்ரஜன் பிணைப்பு
மூன்று மதிப்பெண் ஐந்து மதிப்பெண்

No comments:

Post a Comment